actor Naresh marries for fourth time with Pavithra Lokesh at 60

Advertisment

பிரபல கன்னட நடிகையான பவித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் அயோக்யா, க/பெ ரணசிங்கம், வீட்ல விசேஷம்உள்ளிட்டபடங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக தற்போது மகேஷ் பாபுவின் சகோதரரும் நடிகருமான நரேஷை காதலித்து வந்தார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="0e885e71-d64b-4679-a4ce-31a6aa3d607f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_57.jpg" />

நடிகர் நரேஷ், இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுமூன்றாவதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களுக்கு முன்பு நரேஷும் பவித்ராவும் பெங்களூருவில் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்த போது நரேஷின் 3வது மனைவி ரம்யா அவர்களை அடிக்கப் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இதையடுத்து கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று நடிகர் நரேஷும் நடிகை பவித்ராவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ மீண்டும் பேசுபொருளாக மாற நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா, “எங்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்நிலையில் எப்படி அவர் நான்காவது திருமணம் செய்து கொள்ள முடியும்.” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். பின்பு நடிகர் நரேஷ்குடும்ப நல நீதிமன்றத்தில் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வேண்டி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனிடையே 3வது மனைவி ரம்யாவிடம் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் நரேஷ் நடிகை பவித்ராவை இன்றுதிருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து, "எங்களின் இந்தப் புதிய பயணத்தில் வாழ்நாள் முழுவதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்படி உங்கள் ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகர் நரேஷுக்கு தற்போது 60வயது என்பதுகுறிப்பிடத்தக்கது.